ஆப்கனில் 14 பேர் சுட்டுக்கொலை - தலீபான் அரசு கண்டனம்

September 14, 2024

ஆப்கனில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியட் பிரிவினர் சென்ற வாகனத்தை சரமாரியாக சுட்டதில் 14 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல், ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அடிக்கடி குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். சமீபத்தில், கோர் மாகாணத்தில் இருந்து டைகுந்தி மாகாணத்திற்கு ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்த பிரிவைச் சேர்ந்த சிலர், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்கப்பட் டனர். அந்த பயங்கரவாதிகள், எந்திர […]

ஆப்கனில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியட் பிரிவினர் சென்ற வாகனத்தை சரமாரியாக சுட்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல், ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அடிக்கடி குறிவைத்து தாக்குதல்களை நடத்துகின்றனர். சமீபத்தில், கோர் மாகாணத்தில் இருந்து டைகுந்தி மாகாணத்திற்கு ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த அந்த பிரிவைச் சேர்ந்த சிலர், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்கப்பட் டனர். அந்த பயங்கரவாதிகள், எந்திர துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அந்த வாகனத்தைச் சரமாரியாக சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். தலீபான் அரசு, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu