பாகிஸ்தான் துணை பிரதமராக இஷாக் தர் நியமனம்

April 29, 2024

பாகிஸ்தான் துணை பிரதமராக இஷாக் தர் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் நாட்டின் துணை பிரதமராக நேற்று நியமிக்கப்பட்டார். இவருக்கு வயது 73. பிரதமர் செபாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி இவர். முந்தைய இரண்டு அரசுகளில் இவர் நான்கு முறை நிதி அமைச்சராக பணி செய்துள்ளார். முன்னதாக, இவர் நாடாளுமன்றத்தின் மேலவை தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் […]

பாகிஸ்தான் துணை பிரதமராக இஷாக் தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் நாட்டின் துணை பிரதமராக நேற்று நியமிக்கப்பட்டார். இவருக்கு வயது 73. பிரதமர் செபாஷ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி இவர். முந்தைய இரண்டு அரசுகளில் இவர் நான்கு முறை நிதி அமைச்சராக பணி செய்துள்ளார். முன்னதாக, இவர் நாடாளுமன்றத்தின் மேலவை தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் பிலாவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அதிபர் மற்றும் செனட் சபை தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. எனவே இவர் நாட்டின் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் பாகிஸ்தானின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 266 இடங்களுக்கு போட்டி நடைபெற்றது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. பி எம் எல் என் மற்றும் பிபிபி கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu