இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் இன் தலைவர் அபு ஹசன் அல் ஹாஷிமி அல் குரேஷி மரணம் அடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம், சிரியாவில் நடந்த அமெரிக்க ராணுவ தாக்குதலில், முக்கிய தீவிரவாத தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
கடவுளின் எதிரிகளால் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக தீவிரவாத அமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தீவிரவாத அமைப்பின் ஆடியோ பதிவில், அவர் இறந்த தேதி குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், ஐஎஸ்ஐஎஸ் இன் புதிய தலைவராக அபு அல் உசேன் அல் உசைனி அல் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் அபு இப்ராஹிம் அல் குரேஷி பிப்ரவரி மாதம் சிரியாவில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள்.














