ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நேற்று முன் தினம், சீனர்கள் மற்றும் வெளிநாட்டினர் வழக்கமாகத் தங்கும் ‘காபூல் லாங்கன்’ விடுதியில், தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு, தற்பொழுது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கிளை அமைப்பான ஐ எஸ் கோரசான் முழுப் பொறுப்பேற்றுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் குறைந்த பட்சம் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், தாலிபான் அரசுடன் நட்புறவில் உள்ள நாடுகளுக்கு எதிராக, தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் ரஷ்ய தூதரகப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டன. தற்போது, சீனர்கள் தங்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.