காசா பல்கலைக்கழகம் மீது தாக்குதல் - அமெரிக்கா அதிருப்தி

January 20, 2024

காசாவில் உள்ள பாலஸ்தீன பல்கலைக்கழக கழகம் மீது குண்டு வைத்து தகர்க்கப்பட்டது குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 24620 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தெற்கு காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல், பீரங்கி தாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீன பல்கலைக்கழக கழகம் மீது […]

காசாவில் உள்ள பாலஸ்தீன பல்கலைக்கழக கழகம் மீது குண்டு வைத்து தகர்க்கப்பட்டது குறித்து அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 24620 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தெற்கு காசாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல், பீரங்கி தாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீன பல்கலைக்கழக கழகம் மீது குண்டு வைத்து தகர்க்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அந்த கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறுவது போல் அந்த காட்சி உள்ளது. ஆட்கள் இல்லாத இந்த கட்டிடம் தகர்ந்தது குறித்து இஸ்ரேலிடம் அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அமெரிக்கா வழங்கியது குறிப்பிடத்தக்கது. எனவே கைவிடப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தை தகர்த்தது ஏன் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu