காசா போா் 2024 முழுவதும் தொடரும் - இஸ்ரேல்

January 2, 2024

2024 ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளதாவது, காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையே 2024 ஆம் ஆண்டு முழுவதும் போர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போரில் இலக்குகளை எட்ட இஸ்ரேல் நீண்ட காலம் போரிட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்றவாறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மூன்று லட்சம் ரிசர்வ் வீரர்கள் வரும் […]

2024 ஆம் ஆண்டு முழுவதும் காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளதாவது, காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையே 2024 ஆம் ஆண்டு முழுவதும் போர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போரில் இலக்குகளை எட்ட இஸ்ரேல் நீண்ட காலம் போரிட வேண்டியுள்ளது. அதற்கு ஏற்றவாறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மூன்று லட்சம் ரிசர்வ் வீரர்கள் வரும் வாரங்களில் திரும்ப அழைக்கப்பட உள்ளனர். அவர்களில் பலர் பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்கள். இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும். அதோடு பலத்தை பெருக்கிக் கொண்டு இந்த ஆண்டில் திறம்பட போரை கையாள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி பலியாகினர். புத்தாண்டு அன்றும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே போர் நடைபெற்று வந்தது. காஜாவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை ராணுவம் ராக்கெட் வெடிகுண்டுகள் வீசி தகர்த்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu