இஸ்ரேல் விமானப் படை, லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கு ஆயுதங்களை விநியோகிக்கத் வரும் ஈரான் விமானத்தை சிரியா வான் எல்லையில் இடைமறித்து திருப்பி அனுப்பியதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் ஆயுதங்கள் இருந்ததாக சந்தேகப்பட்டதால், இஸ்ரேல் விமானப் படை விமானத்தை திரும்பச் செல்லுமாறு எச்சரித்தது. இதன்பின், அந்த விமானம் திரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பும், இஸ்ரேல் பல முறை ஈரான் விமானங்களை சிரியா மற்றும் இராக் எல்லைகளில் இடைமறித்து திருப்பி அனுப்பியுள்ளது. 2023 அக்டோபர் 7-ஆம் தேதி முதல், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இதன் போது, 3,961 பேர் உயிரிழந்தனர்.