இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகள் 2 பேரை ஹமாஸ் விடுவித்தது

October 21, 2023

இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகள் 2 பேரை ஹமாஸ் விடுவித்தது.ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஏழாம் தேதி தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். சில பிணைக்கைதிகளை கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பயங்கரவாதிகள் இரண்டு பிணைக்கைதிகளை நேற்று விடுதலை செய்துள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த இருவரும் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆவர். இவர்கள் இருவரிடமும் அமெரிக்க அதிபர் பிடென் தொலைபேசியில் தொடர்பு கொண்டு […]

இரண்டு அமெரிக்க பிணைக்கைதிகள் 2 பேரை ஹமாஸ் விடுவித்தது.ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஏழாம் தேதி தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். சில பிணைக்கைதிகளை கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பயங்கரவாதிகள் இரண்டு பிணைக்கைதிகளை நேற்று விடுதலை செய்துள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த இருவரும் அமெரிக்காவை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆவர். இவர்கள் இருவரிடமும் அமெரிக்க அதிபர் பிடென் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரையும் ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்த போதிலும் காசாவின் மத்திய பகுதியில் தொடர்ந்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu