எகிப்தயும், ரபா நகரையும் இணைக்கும் எல்லை பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் எகிப்திலிருந்து ரபா நகருக்கு வந்து செல்லும் எல்லை வழித்தடத்தை கைப்பற்றியுள்ளோம். அப்பகுதிக்கு பீரங்கிகள் உடன் 401வது படைப்பிரிவு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் நடப்பதாக உளவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவுக்குள் இந்த வழியை தான் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் அவர்கள் பொருட்களை செலவிடாமல் தடுப்பதாக ஐநா அகதிகள் நலப்பிரிவு குற்றம் சாட்டியுள்ளது. ரபா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் திங்கள் அன்று உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த எல்லைப் பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது போர் நிறுத்தம் தொடர்பாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.