காசாவை விட்டு வெளியேறுங்கள் - இஸ்ரேல் அறிவிப்பு

May 7, 2024

ரபா நகரில் தாக்குதல் நடத்தப்போவதால் அங்குள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவு கொண்டுவர பல்வேறு நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக கைரோவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போதிலும் ரபா நகரை இஸ்ரேல் படைகள் […]

ரபா நகரில் தாக்குதல் நடத்தப்போவதால் அங்குள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவு கொண்டுவர பல்வேறு நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடைசியாக கைரோவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்த போதிலும் ரபா நகரை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்துள்ளது. அவ்வப்போது தாக்குதலும் நடத்தி வருகிறது. நேற்று இரவு அங்கு வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தற்போது தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் படைகள் தயார் நிலையில் உள்ளன. அதற்கு முன்னதாக மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கிழக்கு ரபா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதிக்கு செல்லுமாறு நேற்று அறிவுறுத்தப்பட்டனர். ரபா நகரில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தினால் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை செய்த வண்ணம் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu