காஸாவில் நிரந்தர கட்டுப்பாடு திட்டம் - இஸ்ரேல் அமைச்சா்

January 6, 2024

போருக்கு பிறகு காசாவின் ஆட்சி கட்டுப்பாடு குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திட்டத்தை முன் வைத்திருக்கிறார். இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி கேலண்ட் போருக்கு பிறகான காசாவின் நிர்வாக திட்டம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் போர் முடிவடைந்த பின் பாலஸ்தீன பகுதியை ஹமாஸ் அல்லது இஸ்ரேல் ஆளப்போவதில்லை. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை இஸ்ரேல் போர் நடைபெறும். போருக்குப்பின் இஸ்ரேல் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும். அங்கு […]

போருக்கு பிறகு காசாவின் ஆட்சி கட்டுப்பாடு குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திட்டத்தை முன் வைத்திருக்கிறார்.

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி கேலண்ட் போருக்கு பிறகான காசாவின் நிர்வாக திட்டம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் போர் முடிவடைந்த பின் பாலஸ்தீன பகுதியை ஹமாஸ் அல்லது இஸ்ரேல் ஆளப்போவதில்லை. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்கும் வரை இஸ்ரேல் போர் நடைபெறும். போருக்குப்பின் இஸ்ரேல் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் உள்ளூர் அமைப்புகள் மூலம் காசா நிர்வகிக்கப்படும். அங்கு ஹமாசின் கட்டுப்பாடு இருக்காது. போர் முடிந்த பிறகு காசா பகுதியில் இஸ்ரேலியர்களின் நடமாட்டம் இருக்காது. அதே சமயத்தில் அப்பகுதியில் செயல்படும் திறனை இஸ்ரேல் தக்க வைத்துக் கொள்ளும். காசாவில் வாழும் மக்கள் பாலஸ்தீனியர்கள். எனவே பாலஸ்தீனிய அமைப்புகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளில் ஏற்படாத வகையில் உள்ளூர் அமைப்பு நிர்வாகம் அமைக்கப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu