இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் தாமதம்

November 23, 2023

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அத்துடன், இருதரப்பிலும் உள்ள கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இன்று மதியம் 1:30 மணி அளவில் போர் நிறுத்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுவதற்கு கத்தார் முக்கிய பங்காற்றியது. தற்போது, மேலும் சில தகவல்கள் பெற வேண்டி உள்ளதால், போர் நிறுத்த […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அத்துடன், இருதரப்பிலும் உள்ள கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இன்று மதியம் 1:30 மணி அளவில் போர் நிறுத்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுவதற்கு கத்தார் முக்கிய பங்காற்றியது. தற்போது, மேலும் சில தகவல்கள் பெற வேண்டி உள்ளதால், போர் நிறுத்த ஒப்பந்தம் தள்ளிப் போவதாக கத்தார் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பிணைக் கைதிகளை விடுவிக்கும் முறை குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை வரை, பிணைக் கைதிகளை ஒப்படைக்கும் நடைமுறை தொடங்காது என கூறியுள்ளது. சரியாக எப்போது போர் நிறுத்தம் தொடங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu