காசா மருத்துவமனையில் சுமார் 55 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் ராணுவ படை கூறியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 45 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் சிபா மீது கடுமையான தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த மருத்துவமனையை தங்களுடைய போர்க்களமாக பதுங்கும் குழியாக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு ஆகும். இதை அடுத்து அந்த மருத்துவமனையை சுற்றி வளைத்து அதனுள் தீவிர தேடுதல் நடத்தி வந்தது. இதனை அடுத்து மருத்துவமனைக்குள் 10 மீட்டர் ஆழத்தில் சுமார் 55 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதைகள் உள்ளன என்று இஸ்ரேல் படையினர் கூறுகின்றனர். இந்த சுரங்கப்பாதையை அமைப்பினர் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். இது போன்ற பல குழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவைகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம் என்று ஹமாஸ் தலைவர் கூறியுள்ளார்.