காசாவில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு

November 22, 2023

இஸ்ரேல் மந்திரி சபை நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 45 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அடிப்படை உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே பிணை கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் வைத்துள்ள 240 பிணை […]

இஸ்ரேல் மந்திரி சபை நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 45 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அடிப்படை உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே பிணை கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் வைத்துள்ள 240 பிணை கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதனால் இஸ்ரேல் மந்திரி சபை நான்கு நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்ற வகையில் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது. இதனால் ஹமாஸ் விரைவில் பிணை கைதிகளை விடுவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 பிணை கைதிகள் விடுவிக்கப்படும் நேரத்தில் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுவரை இந்த போரில் 13,000-கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu