ரபா தாக்குதலுக்கு இஸ்ரேல் தயார் - எகிப்து கடும் எச்சரிக்கை

April 25, 2024

ராபா நகரில் திட்டமிட்டது போல் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் நேற்று மீண்டும் ஒருமுறை கூறியுள்ளது. ரபா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழித்தால் மட்டுமே போரில் இஸ்ரேல் வெற்றி அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறது. இதனை அடுத்து ரபா நகரில் தரைவழி தாக்குதலை நடத்த கடந்த சில நாட்களாக இஸ்ரேல் அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது. காசா போரில் இதுவரை 34,000-க்கும் அதிகமானோர் பலியாகி […]

ராபா நகரில் திட்டமிட்டது போல் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் நேற்று மீண்டும் ஒருமுறை கூறியுள்ளது.

ரபா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழித்தால் மட்டுமே போரில் இஸ்ரேல் வெற்றி அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறது. இதனை அடுத்து ரபா நகரில் தரைவழி தாக்குதலை நடத்த கடந்த சில நாட்களாக இஸ்ரேல் அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது. காசா போரில் இதுவரை 34,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் எந்த நேரத்தில் நடைபெறும் என்பது குறித்து விரிவான தகவல் அளிக்கவில்லை. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் 40,000 கூடாரங்களை வாங்கி உள்ளது. ஒவ்வொன்றிலும் 10 முதல் 12 மக்கள் தங்கும் வசதி உடையது. ரபா நகரம் அதிகமான மக்கள் தொகை கொண்டது. இங்கு ஹமாஸ் அமைப்பினர் பெரிய அளவில் பதுங்கி உள்ளனர் என்று இஸ்ரேல் உறுதியாக நம்புகிறது.

இந்த அறிவிப்பை அடுத்து எகிப்து அதிபர் அப்துல் சிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரபா நகரில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டால் அதன் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்றும் அந்த மாகாணத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரபா நகரம் எகிப்து எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பாலசீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்னதாக இந்த தாக்குதல் தாக்குதலுக்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்து எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் மேற்கொண்ட நடவடிக்கைகள் இதுவரை பலன் அளிக்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu