மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல் - 9 பாலஸ்தீனியர்கள் பலி

August 29, 2024

மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 9 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக, காசாவை இலக்காக வைத்து நடத்தப்படும் இஸ்ரேலிய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம், மேற்கு கரை பகுதியின் ஜெனின் மற்றும் துல்காரெம் நகரங்களில் அடிக்கடி தாக்குதல்கள் நடத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, துபாஸ் பகுதியில் 7 மற்றும் ஜெனின் பகுதியில் 2 […]

மேற்கு கரையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 9 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறிப்பாக, காசாவை இலக்காக வைத்து நடத்தப்படும் இஸ்ரேலிய தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவம், மேற்கு கரை பகுதியின் ஜெனின் மற்றும் துல்காரெம் நகரங்களில் அடிக்கடி தாக்குதல்கள் நடத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, துபாஸ் பகுதியில் 7 மற்றும் ஜெனின் பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெனின் பகுதியில் பலியான 2 பேர் குவாசம் ஜபரின் மற்றும் ஆசிம் பாலவுட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கு கரையில் 5 லட்சம் யூதர்களுக்கு குடியிருப்புகள் மற்றும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 லட்சம் பாலஸ்தீனியர்கள் அங்கு வாழ்கிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu