ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலிடமும் ஈரானுக்கு எதிரான எந்த தாக்குதலையும் நடத்த வேண்டாம் என்று கேட்டுள்ளனர். லெபனானில் உள்ள ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலாக, ஈரான் செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட பலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியது. இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் மற்றும் பிரிட்டன் பிரதமர் ஈரானின் நடவடிக்கையை கண்டனம் செய்தனர். இதற்கிடையில், லெபனானில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான பதில் தாக்குதலில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளன.














