காசா பகுதியில், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான ஒசாமா அல் முசைனி உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.கடந்த அக்டோபர் 7ம் தேதி, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது மும்முனை தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மிகப்பெரிய போரில் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து 11வது நாளாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் -க்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா படை உள்ளிட்ட அண்டை நாடுகளின் படைகளுடனும் இஸ்ரேல் ராணுவம் போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பதவியில் இருந்த ஒசாமா அல் முஸைனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.