ஈரான் விமான தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்

April 20, 2024

ஈரான் நாட்டின் விமான தளம் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எதுவும் கூறவில்லை. இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக ஈரான் உறுதிப்படுத்தவில்லை. என்றபோதிலும், இத்தாலிய வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணியோ மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் கூறப்படுவதாவது, இஸ்பஹான் நகர வான் பகுதியை நோக்கி சில ட்ரோன்கள் கண்டறியப்பட்டன. நேற்று அதிகாலை […]

ஈரான் நாட்டின் விமான தளம் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எதுவும் கூறவில்லை. இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக ஈரான் உறுதிப்படுத்தவில்லை. என்றபோதிலும், இத்தாலிய வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணியோ மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் கூறப்படுவதாவது, இஸ்பஹான் நகர வான் பகுதியை நோக்கி சில ட்ரோன்கள் கண்டறியப்பட்டன. நேற்று அதிகாலை அந்த ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள அணுசக்தி மையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதலுக்குள்ளான பகுதியில் ஈரானின் விமான தளம் ஒன்று உள்ளது. இங்கிருந்து தான் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை என்று ஈரான் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஈராணுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளில் ஜி 7 உறுப்பு நாடுகள் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கின் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu