ராபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை முன்னேற திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அங்கிருந்து மக்களை வெளியேற்ற ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடும் தாக்குதலில் ஈடுபட்டதால் காசா தெற்கு பகுதிக்கு மக்கள் படையெடுத்துச் சென்றனர். இந்நிலையில், தற்போது தெற்கு பகுதியில் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள ராபா நகரில் மக்கள் பதுங்கியுள்ளனர். இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் மேதன்யாகு ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழு வெற்றி கிடைக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்துள்ளார். அதோடு இதற்கு ராபா பகுதியில் தரைவழி தாக்குதல் அவசியமாகும் என்றும் கூறியுள்ளார். இதை அடுத்து ராபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை முன்னேற திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அங்கிருந்து மக்களை வெளியேற்ற இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
அங்குள்ள பொதுமக்கள் எந்த பகுதிக்கு எவ்வாறு மாற்றப்படுவார்கள் என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை வழங்கப்படவில்லை. இஸ்ரேல் படை ராபா நகரில் தற்போது சுமார் 14 லட்சம் பாலஸ்தீனர்கள் உள்ளனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். இந்த நகரை இஸ்ரேல் தரைப்படை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவார்கள். இது குறித்து ஐநா மற்றும் மனிதநேய உதவி அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.