இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 14 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 14 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இஸ்ரேலின் மேற்கே உள்ள கலிலீ பகுதியில் பெத்வாயின் கிராமம் உள்ளது. அங்கே ஒரு சமூக நலக்கூடத்தின் மீது ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் படை லெபனான் நாட்டின் ஐடா ஆஷாப் என்னும் கிராமத்தில் வளாகம் ஒன்றில் தாக்குதல் நடத்தியது. அங்கு பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.