ஹிஜ்புல்லாவின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
ஹிஜ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது. இதனை ஹிஜ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது. இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஹிஜ்புல்லாவின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி நபில் குவாவக், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஹிஜ்புல்லாவின் மூத்த தளபதிகளுடன் அவரது நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ராணுவம் வெளியிட்ட செய்தியில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பில் உள்ள தளபதிகளை கொல்வதற்கான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளது.