ரபாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்ற இஸ்ரேல் திட்டம்

March 14, 2024

ரபாவில் உள்ள 14 லட்சம் பாலஸ்தீனர்களை மத்திய காசா பகுதியை நோக்கி இடம்பெயர செய்ய இஸ்ரேல் திட்டமிடுகிறது. ஏனெனில், ரபாவில் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. மத்திய காசா பகுதிக்கு உணவு, நீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உள்ளதாகவும், இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளார். இதற்கிடையே, மனித நெரிசல் ரபாவில் மிகுந்துள்ளதால் இங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் பேரழிவு நிச்சயம் என்று மனிதநேய அமைப்புகள் கூறியுள்ளன. காசாவில் […]

ரபாவில் உள்ள 14 லட்சம் பாலஸ்தீனர்களை மத்திய காசா பகுதியை நோக்கி இடம்பெயர செய்ய இஸ்ரேல் திட்டமிடுகிறது.

ஏனெனில், ரபாவில் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்துள்ளது. மத்திய காசா பகுதிக்கு உணவு, நீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உள்ளதாகவும், இஸ்ரேல் தலைமை ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறியுள்ளார். இதற்கிடையே, மனித நெரிசல் ரபாவில் மிகுந்துள்ளதால் இங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் பேரழிவு நிச்சயம் என்று மனிதநேய அமைப்புகள் கூறியுள்ளன.

காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக குடியிருப்புகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்று காசாவில் நிவாரண பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் ராணுவ படை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பொருட்களை வாங்க மக்கள் முன்டியடித்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu