காசா போர் மேலும் 7 மாதம் நீடிக்கும் - இஸ்ரேல்

May 30, 2024

காசா போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. காசாவில் கடந்த எட்டு மாதங்களாக போர் நடைபெறுகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கும் வரை இந்த போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார். இந்த போருக்கு ஐநா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இதனை ஏற்காமல் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இந்நிலையில், காசா மீதான […]

காசா போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

காசாவில் கடந்த எட்டு மாதங்களாக போர் நடைபெறுகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கும் வரை இந்த போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார். இந்த போருக்கு ஐநா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இதனை ஏற்காமல் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இந்நிலையில், காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது, இது குறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டிசச்சின் ஹனேஜிபி கூறுகையில், ஹமாஸ் அமைப்பை அழிக்க எங்களுக்கு மேலும் ஏழு மாதங்கள் தேவைப்படுகிறது. இதனால் மேலும் ஏழு மாதங்களுக்கு போர் நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஹமாசின் ஆயுத கடத்தலை தடுக்க முடியும். இந்த ஆண்டு முழுவதும் காசா போர் நடைபெறும் என்றார்.

இதற்கு இடையே மெக்ஸிகோ நாட்டில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கின்றன. இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கின்றன. அப்போது தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu