இஸ்ரேல் நாட்டின் மற்றும் ஒரு கப்பல் சிறைபிடிப்பு

November 27, 2023

இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான மற்றொரு சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில், ஆயுதக் குழுவினர் சிலர் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘சென்ட்ரல் பார்க்’ என்ற சரக்கு கப்பலை சிறை பிடித்துள்ளனர். இந்தக் கப்பல்; சோடியாக் மேரிடைம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில், இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பல்கேரியா, ரஷ்யா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 22 ஊழியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என சோடியாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் […]

இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான மற்றொரு சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

ஏடன் வளைகுடா பகுதியில், ஆயுதக் குழுவினர் சிலர் இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான ‘சென்ட்ரல் பார்க்’ என்ற சரக்கு கப்பலை சிறை பிடித்துள்ளனர். இந்தக் கப்பல்; சோடியாக் மேரிடைம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பலில், இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பல்கேரியா, ரஷ்யா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 22 ஊழியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என சோடியாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது மூன்றாம் முறையாகும். முன்னதாக, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி ஆயுதக் குழுவினர், இஸ்ரேல் கப்பலை கடத்தியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu