லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு பெண் பலியாகினார்.
இஸ்ரேலுக்கும் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலின் கோலன் பகுதியில் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் 12 சிறுவர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படை லெபனானின் தலைநகர் பேய்ரூட்டின் தெற்கு பகுதியில் நேற்று கடும் தாக்குதல் நடத்தியது. அப்பொழுது ஆளில்லா விமான மூலம் மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. அதில் ஒரு பெண் பலியாகினார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஈரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.














