காசா எல்லையில் இருந்த அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 50 பேர் பலியாகினர் என்று ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டிலுள்ள அறிக்கையில், காசா எல்லையில் இருந்த முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த தாக்குதல் மூலம் அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை இஸ்ரேல் குறி வைத்து இருக்கிறது என்று அறியலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இடிந்து விழுந்த இடுபாடுகளுக்கு இடையே உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் உள்ளன. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.