காசாவின் மையப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் உள்ளது

November 8, 2023

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த போரை நிறுத்த ஐநா மற்றும் பல உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். எனினும் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பது எங்களின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக காசா பகுதியை முற்றுகையிட்டு காசாவின் தலைநகர் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது. இது […]

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த போரை நிறுத்த ஐநா மற்றும் பல உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். எனினும் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பது எங்களின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக காசா பகுதியை முற்றுகையிட்டு காசாவின் தலைநகர் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தத்தை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேல் பிரதமருடன் அவ்வப்போது பேசிக் கொண்டு வருகிறார். எனினும் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் மையப்பகுதியில் உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போர் நிறுத்தம் அல்லது போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பாக சர்வதேச அளவில் அழைப்புகள் வந்துள்ளன. இருந்தாலும் பணைய கைதிகள் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே இதனை பற்றி யோசிக்க முடியும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu