இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில், இஸ்ரேல் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. இது சர்வதேச அளவில் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் கப்பல் தொடர்புகளை துண்டிப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இஸ்ரேல் கப்பல் தொடர்புகள் உடனடியாக தடை செய்யப்படுகின்றன. இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் இருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதநேயமற்ற போரின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைப் போலவே, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடாகும். அந்த வகையில், இஸ்ரேலுக்கு எதிராக மலேசியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.














