காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் படைத்தலைவரின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் படை தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் குடும்பத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அவருடைய மூன்று மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காசாவில் உள்ள அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இவர்கள் ஷாதி முகாமில் இருந்தனர் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். தற்போது ஹமாஸ் - இஸ்ரேல் இடையே எகிப்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. பழிவாங்கும் எண்ணத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளதாக இஸ்மாயில் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தற்போது கத்தாரில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.