நேற்றிரவு, இஸ்ரேல் விமானப்படை லெபனானின் பெகா பகுதியில் உள்ள சுரங்க பாதையை இலக்காக வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது.
சிரியா-லெபனான் இடையை இணைக்கும் இந்த சுரங்கம் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக் கடத்தலுக்காக பயன்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்துகிறது. இதற்கு முன்பும் இந்த சுரங்கம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுரங்கம் மறுபடியும் பயன்பாட்டுக்கு வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இஸ்ரேல் உறுதி கூறியுள்ளது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஆயுதகளைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் தாக்குதலும் நடத்தப்பட்டது. இஸ்ரேல்-லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ள நிலையில், இந்த தாக்குதல் அதனை மீறுவதாக அமைந்துள்ளது.