இஸ்ரேலியர்கள் அமெரிக்காவுக்குள் விசா இன்றி நுழைவதற்கான அனுமதியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.ஒரு வார காலத்திற்கு மட்டும் இஸ்ரேலியர்கள் அமெரிக்காவுக்குள் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேல் மீது சில கண்டனங்கள் உள்ளன. ஆனாலும், ஒரே ஒரு வாரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கிட்டத்தட்ட 40 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு, 3 மாத காலத்திற்கு விசா இன்றி நுழையும் திட்டத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது. ஆண்டனி பிளிங்கன் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தவுடன் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.