நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் உடல்நல குறைவு காரணமாக ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டார். இதில், அவரின் சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், நெதன்யாகுவுக்கு இன்று புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதன்யாகுவுக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன், கடந்த ஆண்டு அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது.