எதிரி நாடுகளின் மொழி, கலாச்சாரம் பற்றிய அறிவின்மை தேசிய பாதுகாப்பில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதால், இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்களுக்கு புதிய பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல், ஈரான் தொடர்பான தகவல் புலனாய்வில் ஏற்பட்ட சவால்கள் போன்ற காரணங்களால், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்றல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 50% வீரர்கள், அதிகாரிகள் ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி பெறுவார்கள். அரபியர்களின் பேச்சு நடைபோல இருக்க, அப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் 'காட்' என்ற தாவரப் பொருளை பயிற்சியில் சேர்க்கும் திட்டமும் உள்ளது. இதற்காக தனி கல்வித் துறை அமைக்கப்படும் என உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் தெரிவித்துள்ளார்.