காசா எகிப்து எல்லையை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம்

May 30, 2024

காசா எகிப்து எல்லை பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, ராஃபா பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு எதிராக ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே ஏழாம் தேதி, எகிப்து உடனான ராஃபா எல்லையில் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. தற்போது, […]

காசா எகிப்து எல்லை பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, ராஃபா பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலுக்கு எதிராக ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே ஏழாம் தேதி, எகிப்து உடனான ராஃபா எல்லையில் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. தற்போது, எல்லைப் பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், எல்லைப் பகுதியில் உள்ள சுரங்க பாதைகள் கண்டுபிடித்து அழிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எகிப்துக்குள் செல்லும் 20 சுரங்கபாதைகளை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், எல்லை தாண்டாத வகையில் பல்வேறு சுரங்கப்பாதைகள் இயங்கி வருவதாகவும், அவற்றையும் கண்டுபிடித்து அழிக்க உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu