இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் கடந்த மூன்று மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் லெபனான் தெற்கு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி விஸ்ஸாம் அல் வில் என்பவரை வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.
லெபனான தெற்கு பகுதியில் இவர் ரகசியமாக செயல்பட்டு வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இஸ்ரேல் காசா இடையேயான போரானது மத்திய கிழக்கு போராக விரிவடையும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை இந்த போரில் 23 ஆயிரத்திற்கும் மேலான பாலசீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.