காசாவின் பெரிய நகரமான கான் யூனிசை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்தது.
காசா போரில் இதுவரை 25000 மக்கள் பலியாகி உள்ளனர். இந்த பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஒரே நாளில் 24 வீரர்கள் வெளியாகி உள்ளனர். இந்நிலையில் காசாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸ் நகரத்தை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கான் யூனிஸ் நகரை இஸ்ரேல் சுற்றிவளைத்தது. அந்தப் பகுதியில் சமீப காலமாக இஸ்ரேல் ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும் முன்னேறி செல்வதற்கான ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த நகரம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆயுத குழுவினர் இடையே பலத்த சண்டை நடைபெற்று வருகிறது.














