ராக்கெட் செயல்பாட்டுக்கான செமி கிரையோஜனிக் இன்ஜினை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. திரவ ஆக்சிஜன் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் இணைப்பில் அதிக திறன் கொண்டதாக இந்த எஞ்சின் வடிவமைக்கப்பட்டு வருகிறது. எல் வி எம் 3 ராக்கெட்டின் சுமக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் இது சோதிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோவின் மகேந்திரகிரி வளாகத்தில் செமி கிரையோஜெனிக் ராக்கெட் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே 2ம் தேதி நடத்தப்பட்ட முதற்கட்ட எரியூட்டும் பரிசோதனை முழுமையான வெற்றி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் என்ஜின், இந்தியாவின் எதிர்கால விண்வெளி திட்டங்களின் வெற்றியை எளிமையாக்கும் என சொல்லப்பட்டுள்ளது.