ககன்யான் திட்டத்துக்காக இஸ்ரோ வடிவமைத்த ஹியூமனாய்ட் ஸ்கல்

இஸ்ரோவின் ஆளில்லா ககன்யான் திட்டம் 2025 ல், வயோமித்ரா என்ற பெண் ரோபோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் தன்னிச்சையாக செய்யப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரும் கைகள், உடற்பகுதி, முகம் மற்றும் கழுத்து ஆகியவற்றை கொண்டுள்ள வயோமித்ரா, ககன்யான் கன்சோலில் செயல்பாடுகளை நடத்தி, அமைப்புகளை கண்காணித்து, பூமியில் உள்ள நிலையத்துடன் தொடர்பு கொள்ளும். வயோமித்ரா ரோபோவுக்கான பிரத்யேக மண்டை ஓட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அலுமினிய கலவை AlSi10Mg ஐ கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மண்டை […]

இஸ்ரோவின் ஆளில்லா ககன்யான் திட்டம் 2025 ல், வயோமித்ரா என்ற பெண் ரோபோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் தன்னிச்சையாக செய்யப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரும் கைகள், உடற்பகுதி, முகம் மற்றும் கழுத்து ஆகியவற்றை கொண்டுள்ள வயோமித்ரா, ககன்யான் கன்சோலில் செயல்பாடுகளை நடத்தி, அமைப்புகளை கண்காணித்து, பூமியில் உள்ள நிலையத்துடன் தொடர்பு கொள்ளும்.

வயோமித்ரா ரோபோவுக்கான பிரத்யேக மண்டை ஓட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. அலுமினிய கலவை AlSi10Mg ஐ கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த மண்டை ஓடு, குறைந்த எடையுடன், அதிக வெப்ப எதிர்ப்புத் திறன் கொண்டது. அத்துடன், இந்த ஹியூமனாய்ட் ஸ்கல், ஏவுகணை அதிர்வுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹியூமனாய்ட் ஸ்கல், 200mm x 200mm அளவும், 800 கிராம் எடையும் கொண்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu