ஜப்பானின் ஸ்லிம் திட்டத்துக்கு உதவிய சந்திரயான் - எக்ஸ் தளத்தில் ஜாக்சா பதிவு

February 1, 2024

ஜனவரி மாதத்தில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் நிலவில் துல்லியமாக தரை இறங்கியது. இதுவரை நிலவில் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கங்களில், அதிக துல்லியத்துடன் தரை இறங்கியது ஸ்லிம் விண்கலம் ஆகும். இதன் தரை இறக்கத்தில், இஸ்ரோவின் சந்திராயன் திட்டம் மிகவும் உதவி செய்ததாக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் - ஜாக்சா தெரிவித்துள்ளது. ‘இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை சேகரித்தது. இவை ஜாக்சாவுக்கு அனுப்பப்பட்டன. அதனை ஆய்வு செய்து, துல்லியமான தரையிறக்கம் […]

ஜனவரி மாதத்தில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் நிலவில் துல்லியமாக தரை இறங்கியது. இதுவரை நிலவில் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கங்களில், அதிக துல்லியத்துடன் தரை இறங்கியது ஸ்லிம் விண்கலம் ஆகும். இதன் தரை இறக்கத்தில், இஸ்ரோவின் சந்திராயன் திட்டம் மிகவும் உதவி செய்ததாக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் - ஜாக்சா தெரிவித்துள்ளது.

‘இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து பல்வேறு தகவல்களை சேகரித்தது. இவை ஜாக்சாவுக்கு அனுப்பப்பட்டன. அதனை ஆய்வு செய்து, துல்லியமான தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதாக’ ஜாக்சாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் x கணக்கை டேக் செய்து, ஜனவரி 30 அன்று பகிரப்பட்ட இந்த எக்ஸ் பதிவு, 1.7 லட்சம் பார்வைகளை பெற்றதோடு 2000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu