நிலவு மற்றும் சூரியன் ஆய்வு திட்டங்களை நிறைவேற்றிய பிறகு, தற்போது, துருவ அளவீட்டுக்கான விண்வெளி திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கி உள்ளது. எக்ஸ்போசாட் (XPOSAT) என்ற செயற்கைக்கோளை வரும் ஜனவரி 1ம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.
கடந்த 2015 ல், அஸ்ட்ரோசாட் என்ற விண்வெளி ஆய்வு செயற்கை கோளையும், 2023 ல், ஆதித்யா எல் 1 ஆய்வு கோளையும் இஸ்ரோ நிறுவியுள்ளது. அதன்படி, தற்போது நிறுவப்பட உள்ள எக்ஸ்போசாட், இந்தியாவின் 3வது விண்வெளி ஆய்வு செயற்கை கோளாக இருக்க உள்ளது. XPOSAT மையத்திலிருந்து ஒளிகள் வெளியேற்றப்பட்டு, அதற்கு விண்வெளியில் உள்ள பொருட்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மொத்த ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, இதே போன்ற ஆய்வு செயற்கைக்கோளை நாசா நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.