விண்வெளியில் 4 நாட்களுக்குள் இந்த காராமணி பயறு விதைகள் முளைத்ததாகவும், அதற்குப் பிறகு முதல் 'இலைகள்' வெளிப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ, விண்வெளியில் தாவரங்கள் வளரக்கூடியதாக இருப்பதை அறிய ஒரு முக்கிய சோதனை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி PSLV-C60 ராக்கெட் மூலம் "CROPS" (Compact Research Module for Orbital Plant Studies) கருவி விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த கருவியில் காராமணி பயறு விதைகள் வைக்கப்பட்டன. விண்வெளியில் 4 நாட்களுக்குள் இந்த காராமணி பயறு விதைகள் முளைத்ததாகவும், அதற்குப் பிறகு முதல் 'இலைகள்' வெளிப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.