இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தின் படி, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் ஆய்வு செய்து வருகின்றன. தற்போது, பிரக்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற கேப்ஷன் உடன் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது பொது மக்களை கவர்ந்துள்ளது.
இன்று காலை இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமரா இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த கேமரா எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.