ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்

உலக வரலாற்றில் முதல் முறையாக, இஸ்ரோ தயாரித்த செயற்கைக்கோள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. நிகழாண்டின் இரண்டாம் காலாண்டில், இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து விண்வெளி திட்டத்தில் பணியாற்ற உள்ளன. இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை செலுத்த உள்ளது. ஜி சாட் 20 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், இந்தியா முழுவதும் பிராட்பேண்ட் சேவைகளை […]

உலக வரலாற்றில் முதல் முறையாக, இஸ்ரோ தயாரித்த செயற்கைக்கோள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.

நிகழாண்டின் இரண்டாம் காலாண்டில், இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து விண்வெளி திட்டத்தில் பணியாற்ற உள்ளன. இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை செலுத்த உள்ளது. ஜி சாட் 20 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், இந்தியா முழுவதும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜி சாட் 20 குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் 2020 இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் செலுத்துவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu