சந்திராயன் - 3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் உறக்க நிலையில் இருந்து திரும்பாத நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.நிலவினை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் - 3 விண்கலம் அங்கு வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. பின்னர் இவை உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்பு சூரியன் உதிக்க ஆரம்பித்தது. இவற்றை உறக்கத்திலிருந்து எழுப்ப விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அங்கிருந்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில் இஸ்ரோ தனது நம்பிக்கையை இழந்து வருகின்றன. குறிப்பாக சூரியன் உதயமாகி ஒரு சில வாரங்கள் கடந்த நிலையில் எந்தவித முன்னேற்றமும் இதுவரை காணவில்லை. இன்று தற்போது சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்துள்ளது. மேலும் வெப்பநிலை வீழ்ச்சி அடைய தொடங்குவதால் இவை மீண்டும் எழுந்திருக்கும் என்ற நம்பிக்கை இழந்து வருவதாக கூறுகின்றனர்.