ககன்யான் திட்டத்தின் மேலும் இரு வெப்ப பரிசோதனைகள் வெற்றி - இஸ்ரோ

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மேலும் இரு வெப்ப பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ஒடிசாவில் உள்ள இஸ்ரோவின் புரோபல்ஷன் காம்ப்ளக்ஸ் வளாகத்தில், இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 10ஆம் தேதி முதல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்ததாக, ஜூலை 26ம் தேதி இரண்டாம் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் முறை 723.6 வினாடிகளுக்கும், அடுத்த முறை 350 வினாடிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, உச்சபட்ச அழுத்த சூழ்நிலையில் ககன்யான் […]

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மேலும் இரு வெப்ப பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ஒடிசாவில் உள்ள இஸ்ரோவின் புரோபல்ஷன் காம்ப்ளக்ஸ் வளாகத்தில், இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 10ஆம் தேதி முதல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்ததாக, ஜூலை 26ம் தேதி இரண்டாம் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் முறை 723.6 வினாடிகளுக்கும், அடுத்த முறை 350 வினாடிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, உச்சபட்ச அழுத்த சூழ்நிலையில் ககன்யான் திறன் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், எதிர்பார்த்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி ககன்யான் திட்டத்தை மேற்கொள்ள இஸ்ரோ தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu