இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, வெற்றிகரமாக கூட்டு ஹைப்பர்சானிக் வாகன சோதனையை நடத்தியுள்ளது.
இந்த சோதனை, தலைமையிட பாதுகாப்பு துறை ஊழியர்களுடன் (JSIIC - HQ IDS) இணைந்து நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், இந்த கூட்டு ஹைப்பர்சானிக் வாகன சோதனை எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வாகனத்தின் செயல்திறன் மற்றும் இதர அளவுருக்கள் எதிர்பார்க்கப்பட்ட முறையில் உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ பதிவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் வெற்றி அறிவிப்பில் இந்திய கப்பல் படை மற்றும் விமானப்படை ஆகியவை பங்கு பெற்றன.