ISRO-வின் புரோபல்ஷன் வளாகத்தில் CE20 கிரையோஜெனிக் எஞ்சினின் கடல் மட்ட வெப்பச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த எஞ்சின் நம் நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யானுக்கு பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
CE20 எஞ்சின் 19 முதல் 22 டன்கள் வரை உந்து சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த எஞ்சின் ஏற்கனவே சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டது. இந்த சோதனையில், விண்வெளியில் எஞ்சினை மீண்டும் இயக்க உதவும் மல்டி-எலிமென்ட் இக்னிட்டர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்ட நோஸ்ல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றன.