மகேந்திரகிரியில் நடத்தப்பட்ட செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி - இஸ்ரோ

தமிழ்நாட்டில் உள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோ தனது முதல் ஒருங்கிணைந்த செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையை மேற்கொண்டது. நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 kN திறனில் இந்த செமி கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சினின் பகுதி செயல்பாடு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. முழுமையாக அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைப்பதற்கு முன்பாக, இந்த பகுதி சோதனை மிகவும் முக்கியமான மைல்கல் என்று சொல்லப்பட்டது. சுமார் 15 மணி நேரத்திற்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இந்த […]

தமிழ்நாட்டில் உள்ள மகேந்திரகிரியில், இஸ்ரோ தனது முதல் ஒருங்கிணைந்த செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையை மேற்கொண்டது. நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 kN திறனில் இந்த செமி கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சினின் பகுதி செயல்பாடு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. முழுமையாக அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைப்பதற்கு முன்பாக, இந்த பகுதி சோதனை மிகவும் முக்கியமான மைல்கல் என்று சொல்லப்பட்டது. சுமார் 15 மணி நேரத்திற்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இந்த என்ஜின் முழுமையாக குளிரூட்டப்பட்டது. மண்ணெண்ணையால் நிரப்பப்பட்ட இன்ஜின் பகுதியில், இன்ஜெக்ஷன் வால்வை திறந்து, LOX செலுத்தப்பட்டு, இந்த சோதனை செய்யப்பட்டது. முதல் முயற்சியிலேயே இந்த சோதனை வெற்றியடைந்தது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu