இந்தியாவில் விண்வெளித் துறை சார்ந்து தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதன்படி, அக்னிக்குள் காஸ்மோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ராக்கெட் என்ஜினை இஸ்ரோ பரிசோதனை செய்துள்ளது. விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதளத்தில், கடந்த நவம்பர் 4ம் தேதி, ராக்கெட் என்ஜின் பரிசோதனை நடத்தப்பட்டது.
அக்னிக்குள் காஸ்மோஸ் தயாரித்துள்ள ராக்கெட் என்ஜின், செமி க்ரையோஜெனிக் வகையை சேர்ந்ததாகும். இது, திரவ ஆக்சிஜன் மற்றும் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூவல் துணைக் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் போது, இந்த ராக்கெட் என்ஜின் 15 வினாடிகளுக்கு ஏரியூட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஸ்கைரூட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை ஏவ உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.